வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

ஊரடங்கு

இந்த ஊரடங்கால் பலர் பொருளாதார நிலையில் சிரமப்பட்டாலும் பல நல்ல விஷயங்களையும் இந்த ஊரடங்கு நமக்கு அளித்துள்ளது.

அவற்றை பார்ப்போம்.

1. இந்த ஊரடங்கு பல கோடி உயிர்களை கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துள்ளது.

2. பணம் மட்டுமே வாழ்க்கை என ஓடிக்கொண்டிருந்த பலரை நின்று நிதானித்து வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர செய்துள்ளது.

3. பலர் பல வருடங்களாக வீட்டில் இருக்கும் போது செய்ய வேண்டும் என கனவு கண்டு கொண்டிருந்த விஷயங்களை செய்து கனவை நினைவாக்கி கொள்ள வாய்ப்பளித்துள்ளது.

4. பலர் தம் உறவுகளோடும் நம்மை நேசிக்கும் மனிதர்களோடும் பழகி மகிழ்ந்திருக்க வாய்ப்பளித்துள்ளது.

5. இதுவரை இல்லாத அளவு இணைய தொழில்நுட்பத்தை தொலை தொடர்புக்கு பயன்படுத்த செய்துள்ளது. இதன் மூலம் அலுவலக பணிகளும் கல்வியும் வீட்டிலிருந்தே கவனித்து கொள்ளும் படி குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளன.

6. இவைகளின் மூலம் மனிதன் தனக்காக தன் மகிழ்ச்சிக்காக செலவு செய்யும் நேரம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு எல்லா சூழ்நிலையிலும் உள்ள ஆதாயங்களையும் நேர்மறை விஷயங்களையும் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்.

நேசத்துடன்

நிர்தோஷ்.