உண்மை அன்பு
நண்பா !
நீ அன்போடு இரு….. ஆனால்
அது உன்னை வழுக்கிவிழ வைத்துவிடப் போகிறது,
அப்போது அது வெறும் பாசம்,
தன்னுணர்வான நிஜத்தை மூடி விட்ட பாசம்.
பகிர்ந்து கொள்வதற்க்கு பதிலாக………….. அன்பை
மனம் பேரம் பேசும் ஒரு வியாபாரம்.
நண்பா!
நீ தியானத்தோடு இரு………. ஆனால்
அது உன் பயணத்தை இறுக்கமாக்கி விடப் போகிறது.
அப்போது அது வெறும் அகங்காரம்
தன்னுணர்வை தடம் புரட்டிவிடும்
ஆன்மீக அகங்காரம்.
இதயம் திறந்து,
மெழுகாய் கரைந்து,
கற்பூரமாய் எரிந்து
வாழ்வதற்கு பதிலாக……….. தியானத்தை
மனம் சுவீகரித்துக் கொண்ட ஒரு அகங்காரம்.
ஆகவே நண்பா,…………..
தன்னுணர்வை இழக்காத பகிர்தலும்…………….
தன்னுணர்வைத் தவிர அனைத்தையும்
கொடுக்கும் இதயமும்……………… தான்
இனிமையான அன்பு.
இதயத்தின் பண்பு – அதுவே
உண்மையான அன்பு.