வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

 

1.

உள்ளே செல்,…. ஆழமாக, இன்னும் ஆழமாக

 

ஒரு அம்பு போல செல்.

 

எல்லா அடுக்குகளையும் ஊடுருவி உன்னுடைய மையத்தை

 

சென்று தாக்கு.

 

அந்த மௌனம்…….அந்த அமைதி………

 

உன்னுள் இருக்கும் புத்தரை கண்டுபிடி.

 

நீ ஒரு பாறையை போல இருக்கிறாய்.

 

தேவையற்ற பாகங்களை செதுக்கி எடுத்துவிட்டால்

 

பின் உள்ளிருக்கும் புத்தர் வடிவம் தன்னை

 

வெளிக்காட்டும்.

 

 

 

2.

வாழ்க்கையை சாகசத்தோடும், சந்தோஷத்தோடும்,

 

பயமின்றியும், குற்றஉணர்வு கொள்ளாமலும் வாழ்ந்து பார்.

 

நரகத்தைப் பற்றிய பயம் ஏதுமின்றியும்,

 

சொர்க்கத்தைப் பற்றிய பேராசை இன்றியும் வாழு.

 

வாழ்க்கையை வெறுமனே வாழு.

 

 

 

3.

உன்னுடைய வாழ்வு முழுவதுமே மாற்றத்தின் புயல்

 

வீசிக் கொண்டேயிருக்கும். காட்சிகள் மாறும், வண்ணங்கள் மாறும்.

 

ஆனால் புயலின் மையம் என்றுமே மாறாது.

 

அது முழு அமைதியாக இருக்கும்,

 

அந்த மையம் தான் நீ.

 

 

 

4.

நீ சத்தியத்தை உணர்ந்த அந்த கணமே

 

எல்லா காலங்களும், நேரங்களும்

 

முக்கியமற்று போய் விடுகின்றன.

 

அது காலத்தையும் நேரத்தையும் கடந்தது.

 

அது அழிவற்றது.

 

ஐந்தாயிரம் வருடங்கள் கடந்தாலும் சரி,

 

ஐந்தாயிரம் வருடங்கள் முன்னாலும் சரி,

 

அது அப்படியேதான் இருக்கும்.

 

இந்த பிரபஞ்சம் ஆணித்தரமாக தானாகவே இருக்கும்.