வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

அதிசய இடம்

 

அன்பு………

 

அது கருவறை சுகம்,

ஓருமையின் ஆனந்தம்,

நிறைவின் வெளிப்பாடு,

இதயத்தின் வாழ்க்கை.

 

ஆம்……….அது அதிசய இடம்…………

 

அங்கு உன் சோகங்களை கொட்டலாம்,

சுகங்களாக மாறும்,

அங்கு உன் புண்களைக் காட்டலாம்,

தழும்பற்ற நலம் கிடைக்கும்,

அங்கு உன் கோபம் வெளிப்படலாம்,

சாந்தம் பின்தொடரும்,

அங்கு உன் பொறாமை பேராசை வெறுப்பு இப்படி….

எல்லா அழுக்குகளும் அதிசயமாய் அனுமதிக்கபடும்,

ஆச்சரியமாய் தீர்ந்துபோகும்,

அங்கு உன் தவறுகள் தவறுகளல்ல

நடைபழகும் குளறுபடிகள்,

ஆகவே ஆனந்த ரசிப்பாய் இருக்கும்.

 

 

அங்கு…….நீ கடலுக்கடியில் இருக்கும் மனிதன்…..

அன்புக் கடலுக்கடியில்…………………………..

இந்த வெளிஉலகம் உன்னை பாதிப்பதில்லை,

வெளிக்காற்று உன்மீது படுவதில்லை,

பார்ப்பதெல்லாம்…….அழகு பரவசம் சத்தியம்.