வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

அன்பின் தீமைகள்

 

அன்பில் குருடனாகிறான்,

ஆம்……அன்பு புறம் சார்ந்ததில்லை,

 

அன்பில் விழுகிறான்,

ஆம்……அன்பு உன்னைவிடப் பெரிது,

 

அன்பில் பைத்தியமாகிறான்,

ஆம்……அன்பு கணக்கிடும் உலகம் கடந்தது,

 

அன்பில் வேதனைப்படுகிறான்,

ஆம்……அன்பு உன்னை புடம் போடுகிறது,

 

அன்பில் அடிமையாகிறான்,

ஆம்…… அன்பே எஜமானன் என்றுணர்ந்ததன் விளைவு,

 

அன்பில் அழிகிறான்,

ஆம்……சுவைத்தவன் விரும்பிச் செய்து கொள்வது இது.