வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

உணர்வூட்டும் ஓஷோ உலகச் செய்திகள்

1.

மலேசியாவில் வெளிவந்த ஒரு கட்டுரை – இதில் ஓஷோவிற்கு விஷம் கொடுத்தது பற்றிய குறிப்பு உள்ளது.

நான் “அராபட் – மிகக் மோசமான கொலை(Arafat: Murder most foul)” என்ற புத்தகத்தை குறிப்பிட விரும்புகிறேன்.

இதில் கூறுவது உண்மையாக இருக்கும் சாத்தியம் மிக அதிகம்.

அராபட், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அதன் திட்டங்களை நிறைவேற்றும் சிஐஏ – விற்கும் மிகப்பெரிய தடையாக இருந்தார்.

எல்லா விஷங்களைப் பற்றியுமான மிக நுண்ணிய விஞ்ஞான ஆய்வுகளைக் கையில் வைத்திருக்கும் அமெரிக்கா, உடலில் எந்தவிதத் தடயமும் கண்டுபிடிக்க முடியாமல் சில வருடங்களில் இறந்துவிடும் படியான விஷத்தை ஒருவனுக்கு கொடுக்க முடியும். அதேசமயம் மனிதகுல காப்பாளர் என்ற பொய்முகத்தை காத்துக் கொள்ளவும் முடியும்.

ஓஷோ, மிகப் பிரபலமான இந்திய ஞானியான இவருக்கு, 1985-ல் இதேபோன்று விஷம் கொடுக்கப்பட்டதான குற்றச்சாட்டு உள்ளது. அவர் அமெரிக்காவின் ஓரகன் மாவட்டத்தில் ஒரு புதிய கம்யூன் அமைத்தார், அங்கு மக்களை தங்களுக்காக தாங்களே சிந்தித்து செயல்படச் சொன்னார். பலவிதமான மக்களும் அந்த கம்யூனிற்கு வந்தனர், முக்கியமாக ஓஷோவின் அன்பு மற்றும் தியானம் பற்றிய அணுகுமுறை அதற்குக் காரணமாக இருந்தது.

திடீரென ஓஷோ ஆபத்தான பார்வை கொண்டவராகவும், அவரை விலக்குவது அவசியம் என்றும் அமெரிக்காவால் கருதப்பட்டது. 1985-ல் அவர் காரணம் கூறாமல் கைது செய்யப்பட்டு பல நாட்களுக்கு யாருமறியாதபடி பல்வேறு சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டார்.

அவருக்கு ஓக்லஹோமா என்ற சிறைச்சாலையில் தாலியம் என்ற விஷம் கொடுக்கப்பட்டது, கடுமையான கதிர்வீச்சுக்கும் உட்படுத்தப்பட்டார் என்பதற்கு ஆதாரம் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் அதன்பின் தாலியத்தின் பாதிப்பை ஒத்த உடல் பாதிப்புகளை அடைந்ததற்கு மருத்துவ சான்றுகள் உள்ளன. ஆனால் ஒரு வருடத்தில் தாலியத்தின் தடயம் முழுவதும் அகன்று விட்டது, பாதிப்புகள் மட்டுமே தொடர்ந்தன.

பல்வேறு மருத்துவ சோதனைகள் லண்டனில் செய்யப்பட்டது, அவருக்கு யாரால் எங்கு எப்படி விஷம் வைக்கப்பட்டது என்பது பற்றிய குறிப்புகள் உள்ளன. ஓஷோ 1990-ல் தாலிய விஷ பாதிப்பால் இறந்துபோனார்.

ஓஷோ, அராபட், லிட்வினென்கோ போன்றவர்கள் இப்படி சதித்திட்டத்தால் கொல்லப்பட வேண்டியவர்களல்ல. தாலியம் மற்றும் பொலோனியம்210 போன்ற விஷங்கள் ஒருசிலரின் கைகளிலேயே இருக்கிறது என்று தெரிந்தும், எப்படி இந்த சதிக் கொலைகளுக்கு ஒருவர் மேலுமே குற்றம் சாட்டாமல் இருக்க முடியும்.

இதற்குக் காரணமானவர்கள் அதிகாரம் மிக்க நாடுகளின் அதிகார அமைப்புகளின் பின்ணணியில் உள்ளவர்களே. நான் உலகெங்கிலும் உள்ள மக்கள் ஐ.நா.சபைக்கு இந்த சதிகளை விசாரிக்குமாறு கோரிக்கை விடுக்க அழைக்கிறேன், இந்த சதிகளைச் செய்தவர்கள் அதன் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

கோலாலம்பூர் – 15.7.2012.  

2.

ஓஷோவின் – யூ ட்யூப் – என்ற வீடியோ இணையதளத்தில் இரண்டு கோடியே முப்பது லட்சம் முறை ஓஷோ வீடியோக்கள் பார்க்கப்பட்டுள்ளன. இதில் கடந்த 12 மாதங்களில் மட்டும் ஐம்பது லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல, ஓஷோ வீடியோக்கள் இப்போது தமிழ் உட்பட பல்வேறு மொழியாக்கத்தோடு காணக்கிடைக்கிறது.

செய்தி – ஓஷோ உலகத் தொடர்பகம் – ஜூன் 2012