வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

நான் உன்னிடம் கூறும் எல்லா சிரிப்புத்துணுக்குகளும் – உன்னைப் பற்றியதே.                         -ஓஷோ.

ஒரு பெண் மருத்துவரிடம் சென்று கேட்டாள் -“நீங்கள் எந்த மருந்தை என் கணவனுக்கு எழுதிக் கொடுத்தீர்கள். அவர் மிகவும் நல்லவராக, மிகவும் பணிவுள்ளவராக இருந்தார், திடீரென உங்கள் மருந்துக்குப்பின் என்னிடமிருந்து தப்பி ஓடிவிட்டார்.”

மருத்துவர் கூறினார், “நான் அவருக்கு மருந்தெதுவும் கொடுக்கவில்லை, வெறுமனே நல்ல கண் கண்ணாடிக்கு எழுதிக் கொடுத்தேன், அவ்வளவுதான். அதனால் அவர் உங்களை நன்கு பார்க்க முடிந்திருக்கலாம், அதன் விளைவாக தப்பித்திருக்கலாம்.”

———

உனக்குத் தேவையானதெல்லாம் உனது வாழ்வைத் உண்மையாகப் பார்க்க உதவும் தெளிவான கண்களே. உனது செயல்களை, உனது உறவுகளை……. இப்படி உன்னைச் சூழ்ந்துள்ள அனைத்தையும். வெறும் தெளிவான பார்வை, அது எல்லாவற்றையும் மாற்றிவிடும். நீ சிரமப்பட்டு செய்ய வேண்டியது எதுவுமில்லை.

உனது தேவையெல்லாம் உனது தன்ணுணர்வில் ஆழமாகச் செல்லல்தான், அது தியானத்தின் மூலம் நிகழும். பிறகு உனது எல்லா செயல்களும், உனது நடத்தையும், உனது வாழ்வும் அதுவாகவே மாற்றமடைய ஆரம்பிக்கும், நீ விஷயங்களைத் தெளிவாகப் பார்க்க ஆரம்பிப்பாய்.

இப்போது நீ மிகுந்த புகைமூட்டத்தின் ஊடே விஷயங்களைப் பார்க்கிறாய், அதனால் எதுவுமே தெளிவாக இல்லை.                        -ஓஷோ