வாழ்க்கை ஒரு சோகக்கதையல்ல. அது நகைச்சுவை நாடகம். வாழ்வது என்பதன் பொருள் நகைச்சுவை உணர்வோடு வாழ்வதுதான். – ஓஷோ
ஐமீ கோல்ட்பர்க் தனது நண்பனிடம் –
எனது மனைவி எப்பொழுதும் பணம், பணம், பணம் என்று நச்சரித்துக் கொண்டேயிருக்கிறாள் – என்று சடைந்து கொண்டான்.
சென்ற வாரம் இருநூறு டாலர் வேண்டுமென்றாள்.
நேற்று முன்தினம் அவள் நூற்றைம்பது டாலர் கேட்டாள்.
இன்றைக்குக் காலையில் மறுபடியும் நூறு டாலர் வேண்டுமென்கிறாள்.
என்றான்.
அதற்கு நண்பன் – இது ரொம்பவும் பித்துப்பிடித்த தனமாக அல்லவா இருக்கிறது. அத்தனை பணத்தையும் அவள் அப்படி என்னதான் செய்கிறாள் – என்று கேட்டான்.
ஐமீ – எனக்கு என்ன தெரியும், நான் இதுவரை அவளுக்கு பணமே கொடுத்ததில்லையே – என்றான்.
உனது மனம் தொடந்து கேட்டுக்கொண்டேதான் இருக்கும். இதைச்செய், இப்படிச்செய், இது வேண்டும்……………..அதன் பேச்சைக் கேட்காதே. தனது மனத்தின் நச்சரிப்பை கேட்பதை நிறுத்தும் கணத்திலேயே, ஒருவன் பிரபஞ்சத்தின் குரலை உணர்ந்து கொள்கிறான்.