வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

1.சிரிப்பு

 

ஆழமான சிரிப்பில் மனம் கரைந்துவிடுகிறது.

 

சிரிப்பு மனதின் பாகமோ, இதயத்தின் பாகமோ அல்ல.

 

உண்மையான சிரிப்பு உனது அடிவயிற்றின் ஆழத்திலிருந்து வரும்போது அது உனது மையத்திலிருந்து வருகிறது. அலைகள் மையத்திலிருந்து கிளம்பி வெளிவட்டத்துக்கு வருவது போல உண்மையான சிரிப்பு உனது மையத்திலிருந்து கிளம்பி அலையலையாய் வெளிப்புறத்துக்கு வரும்.

 

சிரிப்பு உன்னுள் ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்கும்.

 

நீ உன்னைப் பார்த்து சிரிப்பதுதான் உண்மையான சிரிப்பு.

 

எப்போதும் உனது அடி வயிற்றிலிருந்து வருவதுதான் உண்மையான சிரிப்பு.

 

நீ சிரிக்கும்போது எதிர்காலத்திலோ, இறந்த காலத்திலோ இருக்க முடியாது.

 

சிரிப்பு முடிவானதின் வாயிலை திறக்கக் கூடும்.

 

2.அன்பு

 

நிஜமான அன்பு என்பது உள் வெளியை நிறைக்கும் ஏதோ ஒன்று அல்ல. அதற்கு பதிலாக  உள்வெளியை பகிர்ந்து கொள்வதோடு சம்பந்தப்பட்டது. நீ பகிர்ந்துகொண்டால் அது அன்பு. பகிர்தல்தான் மனிதனை தெய்வீகத்தோடு இணைப்பது. அன்புதான் உன்னை தெய்வீகத்தோடு இணைக்கும் பாலம்.

 

அன்பு அபாயகரமான பாதை. துணிவுள்ளவர்கள் மட்டுமே அதில் பயணம் செய்யமுடியும்.

 

அன்பு செய்வது என்பது உனது ஆணவத்தை விடுவது, உன்னை இழப்பது. அன்பு என்றால் இல்லாமல் போவது.

 

நீ மிகவும் தலைகனம் பிடித்தவனாய் இருந்தால் உன்னால் காதலில் விழ முடியாது.

 

உடலுக்கு எப்படி உணவு தேவையோ அது போல ஆன்மாவுக்கு தேவையானது அன்பு.

 

அன்புக்கு தர்க்கம் கிடையாது, அன்புக்கு காரணம் கிடையாது, அன்புதான் வாழ்க்கை.

 

அன்பு நிபந்தனைகளற்ற பரிசு, அது பேரம் பேசுவதல்ல.

 

3.மையம்.

 

மையமின்றி வாழ்வு இல்லை. உனக்கு அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கலாம். அது வேறு விஷயம். அதை நீ உருவாக்க முடியாது, நீ அதை திரும்பவும் கண்டுபிடிக்க வேண்டும். நினைவில் வைத்துக் கொள், நான் நீ அதை கண்டு பிடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை, நீ திரும்பவும் கண்டு பிடிக்க வேண்டும் என்றுதான் கூறுகிறேன்.

 

மையமின்றி யாரும் உயிர்த்திருக்க முடியாது. மையமில்லாமல் வாழ்வு சாத்தியமேயில்லை.

 

புயலின் நடுவே அசையாதிருக்கும் அந்த மையத்தை கண்டறி.

 

கவனமாயிருப்பது, விழிப்புணர்வோடிருப்பது ஒன்று மட்டுமே உன் மையமாகட்டும்.

 

வெளிப்புறமின்றி மையமில்லை. அவை உண்மையில் ஒன்றே.

 

எல்லா சிறப்பானவைகளும் மையத்திலிருந்து தோன்றியவையே.