வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

புதிய உதயம் – பகுதி – 3

வெளியே வாருங்கள் நண்பர்களே !

இதயத்திற்குக் குதித்து அன்பின் புதிய ஆழங்களையும்

                    விண்ணைத் தொடும் சிகரங்களையும்

            அனுபவிக்கப் புறப்படுங்கள் !!

 

இதயம், வாழ்வை வளமாக்கும் சக்திக்காடு !

அது கருணை மேகத்தின் ஈர்ப்பு ! காதல் சூரியனின் பட்டறை !

அங்குதான் தேனும், தேன்சுவைக் கனிகளும்,

பூவும், மணமும் அதன் ஒப்பிலா நிறகோவைகளும்……..

இந்த மானுடம் விளங்கும் மாட்சிமைகளெல்லாம்

                        கொட்டிக் கிடக்கின்றன!!!.

 

கண்மூடித்தனமான அன்பு உங்களை ஆட்சி செய்யட்டும்!

அது இறப்பிலிருந்து இதயதுடிப்பைக் கொண்டுவரட்டும்!

முடிவிலா எண்ணச் சிறையிலிருந்து உங்களை விடுவிக்கட்டும்!

அன்பு……அன்பு…..அன்பு…..

அதன் அரவணைப்பில் என்னைப் புதைத்துக் கொள்கிறேன்,

அதன் அலைகளில் நான் நடனமாடுகிறேன்,

சாந்ததில், புனிதத்தில், ஆனந்தத்தில்………

நித்தமும் அன்பில் பூத்த மலர்களாக………என் வாழ்வு !

 

பசுமைக்காடே !

வசந்தம் வந்தவுடன் நீ செய்யும் ஜாலம்தான் என்ன !

திடீரென்று எங்கும் குலுங்கும் பூக்கள் !

எத்தனை நிறங்கள், எத்தனை வடிவுகள், எத்தனை மணங்கள் !

பச்சை ஆடைகட்டி இளமை கட்டும் அழகு ராணியே !

இந்த சுண்டியிழுக்கும் சாகசத்தை இத்தனைநாள்

                        எங்கே பதுக்கியிருந்தாய் ?

 

சூடு கொள் ! ஆணும் பெண்ணுமான நண்பர்களே !

                        சூடு கொள்வீர்!

இந்த வாய்ப்பை இழக்காதீர் !

நேசியுங்கள் பித்துப் பிடித்து,

தொலைந்து போங்கள் அதில்

இது ஒன்றுதான், ஒன்று மட்டும்தான் கண்டு கொள்ளும் வழி

 

அன்பு அவனிடம் இல்லாத போது,

மனிதனின் வாய் கிழிகிறது – குரைக்கும் நாய் !

எல்லாவித மதங்கள், கொள்கைகள், கருத்துகள் என,

உன்னுடைய நடுக்கத்தை மறைக்கப்போடும் அசிங்க

                  நாடகம்தானே இந்த நாய்குரைப்புகள் !

                                    …………….தொடர்ச்சி அடுத்த இதழில்