வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

புதிய உதயம் – 5 வது பகுதி.

 

உயிர் நண்பர்களே !

 

பலமுறை உங்கள் கூக்குரலையும் கோபத்தையும்

நான் கேட்கிறேன்,

“ டேய், அசிங்கம் பிடித்த மோசக்காரா,

எது எப்படி ஆனாலும் நீ மட்டும் அன்புசூழ்ந்து அன்பில் மூழ்கி

இருக்க வேண்டுமா ?

வெளியே வா !  எங்களைப்பார் !

எங்கள் போராட்டத்திற்கு கைகொடு,

இதுதான் உண்மை அன்பு என்கிறீர்கள்.

 

ஆனால் எனக்குப் பிரியமானவர்களே !

எப்படி எறும்புகள் மலையை இழுக்கமுடியும் ?

இது எண்ணிக்கையின் குற்றமல்ல,

அது ஆதரவில்லாததன் குறைபாடல்ல,

இது ஆற்றலில்லாததன் தோல்வியல்ல,

நீங்கள் மலையைப் பிடித்து உங்கள் பொந்துக்களில்

அடைத்துக்கொள்ள முடியாது .

 

வா நண்பா ! வெளியே !

உங்கள் அன்புச் சிறகுகளை விரியுங்கள்,

பின்பு தெரியும்……….

ஒரு மலைக்குப் போராடும் சிறுமை இனியில்லை,

சிறகுகளுக்கு சிகரங்கள் சொந்தம்

பறக்கும் உனக்கு இனி பாரினில் ஏது எல்லை ?

வா, சேர்ந்து பறப்போம் !

இந்த அண்டத்தின் சிகரங்களையெல்லாம் அனுபவித்தறிவோம் !

 

…………….தொடர்ச்சி அடுத்த இதழில்