வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

ஓஷோ சாஸ்வதம் நிகழ்ச்சிகள் மற்றும் புத்தக வெளியீடு, இமயப்பயணம் 

ஓஷோ சாஸ்வதத்தில் ஜனவரி மாதம் ஜோர்புத்தா தியானப்பட்டறை சிறப்பாக நடைபெற்றது.

ஓஷோ சாஸ்வதத்தில் பிப்ரவரி மாதம் 16, 17 – சனி, ஞாயிறு – 2 நாள் ஜோர்புத்தா தியானப்பட்டறை நடைபெறும்.

இந்த தியானக் கொண்டாட்டத்திற்கு ஓஷோ அன்பர்கள் தங்கள் துணையுடனும், நண்பர்களுடனும் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள். தயவுசெய்து முன்பதிவு செய்து கொள்ளவும்.

15ம் தேதி மாலையே வந்துவிட வேண்டும். அதிக நபர்கள் கலந்துகொள்ளும் தியானப்பட்டறை என்பதால் குழந்தைகளைக் கூட்டிவர வேண்டாம்.

இரண்டு நாளும் வழக்கமான தியானங்களைத்தவிர புதுபுது தியானங்கள் நடைபெற உள்ளன.

உணவு உறைவிடம் உட்படக்கட்டணம்  1500/=. கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம் – சேமிப்புக்கணக்கு, ஆனந்தராகுல்,  பாரத ஸ்டேட் வங்கி,  ஊத்துக்குளி ரோடு,,  திருப்பூர் – எண்- 30883166172. IFSC No.: SBIN0000935. கட்டணம் செலுத்திவிட்டு எஸ்எம்எஸ் செய்யவும். 

விவரங்களுக்கும், முன்பதிவிற்கும் தொடர்பு கொள்ளவும் : 9789482630 , 9894982630

மேலும் விரைவில்…………..

ஓஷோ விபாசனா 7 தினங்கள்

ஓஷோவின் –  மனத்தைக் கடத்தல் 7 தினங்கள்

ஓஷோவின் –  மனம் கடந்த அழகு ரோஜா 21 தினங்கள்

ஓஷோவின் – இயல்புக்குத் திரும்ப உதவும் சுய வசியப் பயிற்சி 7 தினங்கள்

ஆகியவை நடைபெற உள்ளன.

 

10 நபர்கள் சேர்ந்தவுடன் தேதி அறிவிக்கப்படும்.

விருப்பமுள்ள ஓஷோ அன்பர்கள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பல அன்பர்கள் தொடர்பு கொண்டார்கள். ஆனால் இப்போது எனக்கு நினைவில்லை.

ஆகவே தயவுசெய்து தாங்கள் கலந்துகொள்ள விரும்பும் தியான பயிற்சியையும், பெயரையும் எஸ்எம்எஸ் அல்லது ஈமெயில் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

புத்தக வெளியீடு

 

நமது – ஏன் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் – என்ற புத்தகம் பெற விரும்புவோர் ரூ.230 மணியார்டர் செய்யவும். கொரியரில் அனுப்பிவைக்கிறோம்.

இதன் விலர்சனம் 4.11.12 ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ளது.

இமயப்பயணம் 

அன்பு நண்பர்களுக்கு,

ஏறத்தாழ 20 நண்பர்கள் கீழ்க்கண்ட நடைப்பயணம் வருகிறார்கள்.

நான் இமயமலையின் ரசிகன். ஆகவே சிரமம் பார்க்காமல் இதை ஏற்பாடு செய்கிறேன்.

இனிய அனுபவங்களும், அற்புத இமயமலையும், சிறந்த ஏற்பாடுகளும் நமக்காக காத்திருக்கின்றன.

 

விவரம்

கவேரி கணவாய் மலையேற்றம், ஹேம்குந்த், மலர் பள்ளத்தாக்கு நடைப்பயணங்கள் மற்றும் பத்ரிநாத், ரிஷிகேஷ், ஹரித்துவார்

 

கர்சன் வழிநடை என்று அழைக்கப்படும் இந்தப்பாதை அமெரிக்கர் மற்றும் ஐரோப்பியர்களிடம் புகழ் பெற்றது. நந்தாதேவி, காமத், துரோணகிரி மற்றும் ஹதிகோரா பர்வத் சிகரங்களை பார்த்து அனுபவிக்கலாம்.

 

03-06-13     இரவு 9 மணி – திருப்பூரிலிருந்து நியூடெல்லி ரயில்

05-06-13     டெல்லி அடைதல், இரவு அங்கிருந்து காத்கோதாம் ரயில்

06-06-13     காத்கோதாமிலிருந்து கௌசாலி, நைனிடால் அருகிருக்கும் ஈகோ கேம்ப் சென்று  தங்கல்-மலைப்பாதையில் 150 கி.மீ.

07-06-13     உடல் பழக ஓரு சிறிய மலையேற்றம்.

08-06-13     வான் கிராமத்திற்கு ஜீப்பில் சென்று கேம்ப் சைட்டில் தங்கல். கூடாரத்தங்கல்

09-06-13     சுடோல் நோக்கி 14 கி.மீ நடை. முதலில் ஏறி பின் இரக்கம். காடுகள் வழி-  கூடாரத்தில் தங்கல்

10-06-13     குன்னி நோக்கி 15 கி.மீ நடை. முதலில் ஏறி பின் சமதளம். இமயமலையின்  உள்ளே இருக்கும் சில கிராமங்களைக் காணலாம். கூடாரத்தில் தங்கல்

11-06-13      ஜன்ஜிபானி நோக்கி 16 கி.மீ நடை. விநாயக் கணவாய் வரை ஏற்றம், பின்  இறங்கி கிராமத்தில் தங்கல்.

12-06-13     பானா கேம்ப் நோக்கி 13 கி.மீ. நடை. பிராகி கங்கா வரை இறக்கம். பின் உச்சிவரை ஏற்றம். பிறகு பானா கிராமம். அங்கிருந்து 1கி.மீ.ல் கூடாரத்தங்கல்.

13-06-13     தாக்வானி நோக்கி 12 கி.மீ. நடை. முதலில் உச்சிக்கு ஏறுதல். பிறகு சமம், பிறகு சர்டோலி புல்தரை நோக்கி        இறங்கல், மறுபடி நீரோடை வரை இறங்கல். பிறகு  அடுத்த கரை தாக்வானிக்கு ஏறுதல். கூடாரத்தங்கல்.

14-06-13     கவேரி கணவாய் பின் தாளிக்கு 14 கி.மீ. நடை. முதலில் கணவாய்க்கு ஏறுதல்.  அங்கிருந்து இமயமலையின்   பல்வேறு சிகரங்களை துல்லியமாக பார்த்து  ரசிக்கலாம். பிறகு தாளிக்கு இறங்கி கூடாரத்தில் தங்கல்.

15-06-13     ஆலி வழியாக ஜோஷிமத் வருதல். நந்தாதேவி சிகரத்தை ரசிக்கலாம். நடந்து வந்து 15 கி.மீ. ஜீப்பில் வந்து ஓட்டலில் தங்கல்.

16-06-13     கோவிந்த் காட்டிற்கு ஜீப்பில் சென்று அங்கிருந்து கங்காரியா 13 கி.மீ. நடை. சுலபமாக வசதிகளுடன் இருக்கும். ஓட்டலில் தங்கல்.

17-06-13     ஹேம்குந்த் உச்சிக்கு ஏறல். போக வர 12 கி.மீ. செங்குத்தான ஏற்றம். மலர்கள்  நிறைந்த பாதை. சீக்கிய புனிதத்தலம். பனி உறைந்த ஏரி உள்ளது

18-06-13     மலர் பள்ளத்தாக்கு போக வர 7 கி.மீ. உலகின் மிக அரிய 650 வகை மலர்கள்  இயற்கையாக பூத்துக் குலுங்குகின்றன. 100 சதுர கி.மீ. பரப்புக்கு பரந்து விரிந்த  இயற்கைப்பூந்தோட்டம்.

19-06-13     திரும்ப கோவிந்த்காட் 13 கி.மீ. நடை. பின் பத்ரிநாத் ஜீப்பில் பயணம். தங்கல்.

20-06-13     ரிஷிகேஷ்-300 கி.மீ. இமயமலையில் இறங்கும் பஸ் பயணம். தங்கல்.

21-06-13     ரிஷிகேஷ், ஹரித்துவார் சுற்றிப்பார்த்தல் – இரவு 00.40 டெல்லி பயணம்.

22-06-13     டெல்லியிலிருந்து சென்னை விமானத்தில் திரும்பல்.

23-06-13     அதிகாலை திருப்பூர் வந்தடைதல்.

மொத்தம் 19 நாட்கள் 4-06-13 முதல் 22-06-13 உட்பட

மொத்த செலவு- ரூ.41000.00

உடனடியாக ரூ.10000.00 விமானம் மற்றும் ரயில் டிக்கட்டுகளுக்காக

15-04-13 வாக்கில் ரூ.15000.00 ஏற்பாடுகளுக்கு முன்பணம் அனுப்ப.

மீதமுள்ள ரூ.16000.00 புறப்படும்போது.

மற்ற முன்னேற்பாடு விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.