1. உங்களுடைய EGO -வின் உங்களைப் பற்றிய பிம்பத்தை காப்பாற்றுவதையும் உங்களை நீங்கள் எப்போதும் எடை போடுவதையும் கைவிட்டு, அந்த உங்களை பற்றிய பிம்பத்தை உடைந்தெறிந்தால், நாம் சரியாக நடக்கிறோமா ? இல்லையா ? என்பதை மற்றவர்களிடமிருந்து பெறும் அங்கீகாரத்தை வைத்து தெரிந்துகொள்ள வேண்டிய நிலை இருக்காது. அப்போது மற்றவர்களிடமிருந்து அங்கீகாரம் தேவைப்படாது. நீங்கள் செய்வது சரியா? தவறா? என அறிய நீங்கள்  உங்கள் சொந்த விழிப்புணர்வை பயன்படுத்த தொடங்குவீர்கள். நீங்கள் உங்கள் சொந்த விழிப்புணர்வை பயன்படுத்த தொடங்கும் போது முதன்முறையாக ஓஷோ கூறும் தனிமனிதனாக மாறுகிறீர்கள்.


2. நீங்கள் உங்கள் உடலை சுத்தப்படுத்த தினமும் குளிப்பது போல நீங்கள் உங்கள் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் கத்தாரீஸிஸ் மூலம் தினந்தோறும் வெளிப்படுத்தி உங்கள் உணர்வு மற்றும் உணர்ச்சி எதுவும் அடக்கி வைக்கப்படாமல் இருக்கும்படி உங்கள் உணர்வும் உணர்ச்சியும் எப்போதும் நிகழ்காலத்தை அதாவது இந்த கணத்தில் இருக்கும்படியும் இந்த கணத்திற்கு ஏற்ற உணர்ச்சியையும் உணர்வையும் உணரும்படி எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

3. இந்த இரண்டு விஷயங்களை தவிர விழிப்புணர்வு வளர இயற்கையை அல்லது ஞானியை நோக்கியதாக ஓஷோவின் தியான முறைகள் செய்தல் அல்லது அவரது பேச்சை கேட்டல் என அவருடன் தொடர்பில் இருக்க வேண்டும் அப்போதுதான் அவர் இருக்கும் ஞான நிலை நமக்கும் ஆர்வத்தை உண்டாக்கி காந்தம் இரும்பை இழுப்பது போல அவரும் அவரது நிலையும் நம்மை அந்த நிலை நோக்கி ஈர்த்து கொண்டே இருப்பார்கள்.

4. இந்த தியான யுக்திகளை செய்து நீங்கள் யார் என்பதன் அடையாளம் மனம் என்பதிலிருந்து விழிப்புணர்வு என மாறிய பின்பு பல தியான அனுபவங்களின் காரணமாக எழும் நன்றியுணர்வு மூலமாக (ஓஷோவிற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றும்) வேலை செய்தால் அது நன்றியுணர்வு மற்றும் படைப்பாற்றல் உள்ள வாழ்வாக அமையும்.

நேசத்துடன்,

நிர்தோஷ்